திங்கள், 25 ஆகஸ்ட், 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.08.2025 ( திங்கள் )

அரசு உயர்நிலைப்பள்ளி

குளத்தூர்நாயக்கர்பட்டி

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.08.2025


1.திருக்குறள் 

 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் 

          சாந்துணையும் கல்வி உடைத்து


2.பொன்மொழி

     கல்வியே மனிதனை படைப்பாற்றல் மிக்கவராகமாற்றுகிறது.   படைப்பாற்றலே அவனை சிறப்பு மிக்கவனாக மாற்றுகிறது. 

                                                                -அப்துல்கலாம்


3. பழமொழி

        The one who gains knowledge conquers the world 

        கல்வி கற்றவன் உலகை வெல்வான்


4. பொது அறிவு

        1)களப்பிரர் ஆட்சிக்குப் பிறகு தமிழகத்தில் மூவேந்தர்களில்

 முதலில்  தம் ஆட்சியை மீட்டெடுத்த வம்சம் எது?


                 பாண்டிய வம்சம்


        2)பாண்டிய மன்னர் நெடுஞ்செழியன் அரங்கில் நந்தகோபாலனைப்   புகழ்ந்து பாடிய சங்கக் கவிஞர் யார்?


                மாங்குடி மருதனார்


5)இரண்டொழுக்கப் பண்புகள்

       1)சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப்

 பேசுவேன்.


      2)தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்


6)இன்றைய செய்திகள்

     

      1)இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) நேற்று, நாட்டின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானுக்கான தயாரிப்புகளில் ஒரு முக்கியமான மைல்கல்லான, அதன் முதல் ஒருங்கிணைந்த வான்வழித் துளி சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.


              2)செப். 30ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு- இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு


            3)முதுநிலை பொறியியல் படிப்பில் சேர 2026-ம் ஆண்டுக்கான GATE நுழைவுத் தேர்வு பிப். 7,8 மற்றும் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

  
            4)தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்திலிருந்து அடுத்த ஆண்டு டிசம்பரில் ராக்கெட் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்

            5)இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 1 கோடி மாணவர்கள் பயன் அடைந்து உள்ளதாக தமிழக அரசு தகவல்

           6)இன்று முதல் அமெரிக்காவிற்கு அனுப்பும் அஞ்சல்கள் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவிப்பு

           7)உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளார் - உக்ரைன் தூதர் தகவல்

    8)ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்- தங்கப் பதக்கம் வென்றது அர்ஜுன் - இளவேனில் இந்திய அணி


7)Today's Headlines   

      1)The Indian Space Research Organisation (ISRO) yesterday successfully conducted its first integrated aerial drop test, a major milestone in the preparations for the country's first human space mission, Gaganyaan. 


       2)Final voter list to be published on Sept. 30- Election Commission of India announces             

       3)GATE 2026 entrance exam for admission to postgraduate engineering courses will be held on Feb. 7,8 and 14,15, and the application registration for the same begins today.

       4)Rocket will be launched from Kulasekarapatnam in Tuticorin district in December next year - ISRO Chairman V. Narayanan informed               

       5) Tamil Nadu government informed that 1 crore students have benefited from the Illam Thedi education scheme               

       6) Indian Postal Department announces that mail sent to the US will be stopped from today               

       7) Ukrainian President Zelensky is coming to India soon - Ukrainian Ambassador informed     

        8) Asian Shooting Championship - Arjun - Elavenil Team won the gold medal





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.08.2025 ( திங்கள் )

அரசு உயர்நிலைப்பள்ளி குளத்தூர்நாயக்கர்பட்டி பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.08.2025 1. திருக்குறள்     யாதானும் நாடாமால் ஊராமால் என...